Thursday, November 27, 2008

ஒரு நாள் கூத்துக்கு ....

மோகம் பிறந்ததம்மா முந்தா நாள் பார்க்கையிலே
நேசம் பிறந்ததம்மா நேத்து நீ நடக்கையிலே
ஏக்கம் பிறந்ததம்மா இன்று நீ சிரிக்கையிலே
இன்பம் பிறக்குமம்மா நாளை இந்த வேளையிலே


ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே
ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே
ஆஹா மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே

குண்டு விழி மண்டு மொழி
சிண்டு முடி நண்டு நடை போட்டான் பாரம்மா
கட்டு விழி முத்து மொழி
சித்திரத்தில் உத்தரவை கேட்டான் பாரம்மா

ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே

ராணியம்மா ஆசைப்பட்டா ஆடச்சொல்லி ஆணையிட்டா
மறுப்பேச்சென்ன மூச்சென்ன வந்தேனே என்றான்
அவன் யாரென்று பேர் சொல்லி நெஞ்சோடு நின்றான்
அவன் யாரென்று பேர் சொல்லி நெஞ்சோடு நின்றான்
சுற்றத்தாரின் மத்தியிலே
கத்துவெச்ச வித்தைகளை படிச்சான் பாரம்மா
பொம்பளைய தோற்க வெச்சு
பக்கம் வந்து நிக்கவெச்சு சிரிச்சான் பாரம்மா

ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே

பாட்டுக்கெல்லாம் தலை அசைச்சான்
பாக்குறவன் அதிசயிச்சான் அவன் ஆட்டத்தில்
மோகத்தை உண்டாக்கி வெச்சான் இந்த கூட்டத்தில்
நோட்டத்தை உன் மேல வெச்சான் இந்த கூட்டத்தில்
நோட்டத்தை உன் மேல வெச்சான்
புன்னகையும் பொன்னகையும் மின்னலொரு
அன்ன மகள் உசுரா நெனச்சானே
சொல்லியதை சொன்னபடி எண்ணியதை எண்ணப்படி
நெனச்சா முடிப்பானே
புலி வேஷம் போட்டவன்தான் பூனையை போல் மாறி வந்தான்
எலி வேட்டைக்கு நாள் வைத்து போராட வந்தான்
வெளி வேஷத்தை மோசத்தை பொய்யாக்க வந்தான்
வெளி வேஷத்தை மோசத்தை பொய்யாக்க வந்தான்
கம்பு சண்டை வம்பு சண்டை
கத்தி சண்டை குத்து சண்டை போட்டான் தனியாக
பத்து பேரு மத்தியிலே ஒருத்தனாக
சுத்திவந்து ஜெயிச்சான் முடிவாக

ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே
ஆஹா மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே

நான் செத்துப் பொழச்சவன்டா ....

நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா !
ஹா ஹா ஹா ஹா ...
நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா !

வாழைப்போல வெட்ட வெட்ட முளைச்சு
சங்கு போல சுடச் சுட வெளுத்து
வளரும் ஜாதியடா
வந்தால் தெரியும் சேதியடா


நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா!

சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு ...
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு
குண்டுகள் போட்டு துளைச்சாங்க
ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா ..அண்ணா ..
சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா


நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா !

ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து ...
ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரை காத்த கூட்டம் இது
பரம்பரை ரத்தம் உடம்பில தான்
அது முறுக்கேறி கிடப்பது நரம்பில தான்
பரம்பரை ரத்தம் உடம்பில தான்
அது முறுக்கேறி கிடப்பது நரம்பில தான்
கொடுப்பதை கொடுத்தா தெரியுமடா
உன் இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா
காலம்தோறும் குட்டக் குட்ட குனிஞ்சி
கொடுமைக்கெல்லாம் கட்டுப்பட்டு கிடந்து
நிமிர்ந்த கூட்டமடா
எதிர்த்தால் வாலை நறுக்குமடா


நான் செத்துப் பொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிச்சவன்டா
நான் செத்துப் பொழச்சவன்டா !
செத்துப் பொழச்சவன்டா !
செத்துப் பொழச்சவன்டா !
செத்துப் பொழச்சவன்டா !

Tuesday, November 18, 2008

நாயகமே நபி நாயகமே .....

நாயகமே ....................
ஜகமே புகழவே .............
நாயகமே ...........

நாயகமே நபி நாயகமே
நலமே அருள் நபி நாயகமே
நாயகமே நபி நாயகமே

நாடாளும் மன்னர் நீடூழி வாழ
நலமே அருள் நபி நாயகமே
நாயகமே நபி நாயகமே


நாயகமே ...........
இணையில்லாத எங்கள் பாதுஷா
பிறந்த இன்ப நாளிலே நாயகமே
இந்து முஸ்லிம் ஒற்றுமையோடு
இன்புற வேண்டும் நாயகமே
நாயகமே நபி நாயகமே

நாயகமே ...............
அறியாமை இருள் நீங்கி
இன்ப ஒளி அமைய வேண்டும்
அன்பின் இதயமே காணிக்கை செய்வோம்
அருள் தாரும் நபி நாயகமே
நாயகமே நபி நாயகமே

Sunday, November 16, 2008

கந்தனுக்கு மாலையிட்டாள் ...

கந்தனுக்கு மாலையிட்டாள் ,
கானகத்து வள்ளி மயில்
கல்யாண கோலத்திலே
கவிதை சொன்னாள் காதல் குயில்


சொக்கருடன் மீனாட்சி
சொக்கி நிக்கும் திருக்காட்சி
காணவந்த கண்கள் ரெண்டும் ,
காதலுக்கு ஒரு சாட்சி


பூவோடு போட்டும் தந்தேன் ,
ஒரு பூவைக்கு வாழ்வு தந்தேன்
சலங்கை கட்டும் இல்லத்திலே ,
தாலி கட்டும் நடக்க கண்டேன்

தேவனை தேடி சென்றேன் -
தேவியுடன் அவனிருந்தான்
வீணையுடன் நானிருந்தேன் ,
விதியை எண்ணி பாடுகின்றேன் !


பாடல் : முத்துலிங்கம்
இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர் :வாணி ஜெயராம்

உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் ...

உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்


கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே
பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே
கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே
பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே
சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்
சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்
ஓர் உயிர் தான் யாவருக்கும் உள்ளது
அது ஒருமுறை தான் நம்மை விட்டு செல்வது
ஓர் உயிர் தான் யாவருக்கும் உள்ளது
அது ஒருமுறை தான் நம்மை விட்டு செல்வது
செல்வம் இன்று வந்து நாளை போவது
செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது
செல்வம் இன்று வந்து நாளை போவது
செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது


ஏழை கதை மேடையிலே சொல்லுவார்
அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்
ஏழை கதை மேடையிலே சொல்லுவார்
அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்
யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா
அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா
யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா
அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா

வில்லேந்தும் வீரரெல்லாம் .....

வில்லேந்தும் வீரரெல்லாம்
வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
வில்லேந்தும் வீரரெல்லாம்
வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
எனை வெற்றி பெற முடியாது
நீர் கற்ற வித்தையும் செல்லாது
(வில்லேந்தும் )

அகம்பாவத்தினாலே
எனை அலட்சியம் செய்யாதே
வீண் அகம்பாவத்தினாலே
எனை அலட்சியம் செய்யாதே
இந்த ஜகமே புகழுவதால்
எனை மதியாமல் உளறாதே


எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே
எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே

என்ன வேனும் துரையே?
இஷ்டம் போலே கேள் இனியே ...
பன்னிரண்டு போட வேனும்
அது தானே ஜெயம் காணும்
ஈராறும் பன்னிரண்டு
ஏங்குதே உன் கண்ணிரண்டு
ஈராறும் பன்னிரண்டு
ஏங்குதே உன் கண்ணிரண்டு

வீராப்பு பேசி வந்த பூரோப்பு ராஜாவை
வெட்டிடச் சொல்லு மண்
வெட்டிடச் சொல்லு
வீராதி வீரனென்று சோம்பேறியாய் திரிந்தால்
கட்டிடச் சொல்லு மரத்தில்
கட்டிடச் சொல்லு

மதியை இழக்கிறார் மனப்பால் குடிக்கிறார்
தலை விதியால் கால சதியால் வந்து
தனியே வாடுறார் (மதியை )
நிதியோடு வாழும் செல்வந்தர் யாவும்
தனியாய் பாவம் வாழ்கிறார்
இனியேது வாழ்வில் செல்வம் என்றாலே
நிலையே மாறி ஏங்குகிறார்
விதியால் கால சதியால் வந்து
தனியே வாடுறார்
(மதியை )

வில்லேந்தும் வீரரெல்லாம்
வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
என்ன வேனும் துரையே
இஷ்டம் போலே கேள் இனியே !
அன்னமே டௌலக்கி
என் ஆசையான கற்கண்டு
எண்ணம் போலவே இன்பம் காணவே
போட வேண்டுமே ரெண்டு
...................

சொக்கா போட்ட நவாபு ...

லா... லா... லா.
லா ...லா..லா
லல்லல லல்லல லல்லல லல்லல
லல்லல லா .....

சொக்கா போட்ட நவாபு
செல்லாது ஒங்க ஜவாபு
நிக்கா புருஷன் போலே வந்து
ஏமாந்தும் என்ன வீராப்பு?
(சொக்கா போட்ட நவாபு )

கண்ணாலே மயங்கிடுவார்
கத்திரி மீசை ராஜாவே !
அண்டாவை விளக்கி விளக்கி
அசந்து போன கூஜாவே!

சூராதி சூரர்களே !
வீராதி வீரர்களே !
சொல்லாமல் ஓடிப்போன
குல்லாப் போட்ட ராஜாவே !
சொக்கட்டான் ஆசையினாலே
சொக்கியே வீழ்ந்தவரே !
உள்ளதை நான் சொல்லப் போனால்
உங்களுக்கு ஏன் பொல்லாப்பு ?
(சொக்கா போட்ட நவாபு )

எட்டாத கனியை நம்பி
ஏங்கி ஏங்கி மயங்காதே
எந்நாளும் பெண்ணாசையால்
ஏமாந்து தொலையாதே
ஜோரான ஆண்சிங்கம் போலே
துள்ளியே வந்தவரே
லோகத்திலே மாதர் முன்னே
சூரத்தனம் செல்லாது

(சொக்கா போட்ட நவாபு )

ஆம்பளைங்களா ....

சே ச் சே ச் ச ச ச் ச ச ச ச .....
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா ?
ஓர் ஆறு கஜம் சேலை கட்டி
நாலு வளை போடுங்களே
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா ?

வாள் பிடித்த பரம்பரையில் வந்தவங்களா?
புலி வால் பிடித்த வீரர்களின் வாரிசுகளா ?
மேலுதட்டில் மீசை வைச்ச பொம்பளைங்களா ?
வெத்து வேட்டு சத்தம் போடும் மத்தளங்களா?
(ஆம்பளைங்களா )

அந்த கால ஆம்பளைங்க போர் புரிவாங்க
நல்ல ஆழமான வேலை செய்ய ஏர் உழுவாங்க
இந்த காலம் நீங்க அதை மறந்து விட்டீங்க
இனி இளிச்சவாயன் பட்டம் வாங்க பொறந்து விட்டீங்க
(ஆம்பளைங்களா )

காந்தி என்ற வீர மகன் பொறந்த நாடுங்க
நல்ல கடமை சொன்ன அறிஞர் அண்ணா வளர்ந்த நாடுங்க
நீங்க கூட இந்த நாட்டு மனிதர் தானுங்க
எனக்கு நேரமில்லை சீக்கிரமா வளையல் போடுங்க
(ஆம்பளைங்களா )

Thursday, November 6, 2008

ஒரு தாய் வயிற்றில் ...

ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
நல்ல மனிதருக்கும் நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்
(ஒரு தாய் )

சோலை மலர்க் கூட்டம் சொந்தம் கொண்டாடி
சிரித்து உறவாடுதே
மாலை பனி மூட்டம் மலர்கள் இலை தோறும்
சிரித்து விளையாடுதே
இங்கு நான் அங்கு நீ, என்று நாம் வாழலாம்
அண்ணன் போற்றும் தம்பி
என்று நீயே கூறலாம்
(ஒரு தாய் )


உடலின் பின்னோடு உலவும் நிழல்கூட
இருளில் பிரிகின்றது
வெளிச்சம் வரும் போது உடலை நிழல்தேடி
இணைய வருகின்றது
என் மனம் பொன்மனம் என்பதை காணலாம்
நாளை அந்த வேளை
வந்து என்னை சேரலாம்
(ஒரு தாய் )

கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்
(ஒரு தாய் )